2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

நுண்கடன் திருத்தச் சட்டம்; ‘பத்திரம் செவ்வாயன்று சமர்ப்பிக்கப்படும்’

Editorial   / 2018 ஜூலை 23 , மு.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுண்கடன் திருத்தச் சட்டத்துக்கு ​அனுமதி கோரும் அமைச்சரவைப் பத்திரம், நாளை செவ்வாய்க்கிழமை (24) நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தின் போது சமர்ப்பிக்கப்ப டவுள்ளதாக, நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில், நேற்று (22) இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துரையாடும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மிகவும் அதிகளவான வட்டி விகிதங்களுக்கு கடன்களை வழங்கிய, விசேடமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த நுண்கடன் நிதி நிறுவனங்களைத் தண்​டிப்பதற்காகவே, இந்தத் திருத்தம் கொண்டுவரப்படவுள்ளது என்றும் சில நிறுவனங்கள், 40 சதவீத வட்டிக்கும் கடன்களை வழங்கியுள்ளன என்றும் அவர் கூறினார்.

எனவே, புதிய சட்டத்தின் பிரகாரம், நுண்கடன் வழங்கும் நிறுவனங்கள், 30 சதவீத வட்டியை மாத்திரமே அறவிடக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, நுண்கடன் நிதி நிறுவனங்களிடமிருந்து மக்கள் பெற்றுக்கொண்டு, தற்போது செலுத்தப்படாமலுள்ள கடன்களில், 50 சதவீதத்தை, அரசாங்கம் செலுத்தி முடிக்கும் என்றும், கூட்டுறவுகளின் மூலம், தொழில் முயற்சியாண்மைத் திட்டத்தின் கீழ் கடன்களை வழங்குவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அமைச்சர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .