2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

நெல் உற்பத்தி தாக்கங்களைக் குறைக்க செயற்கைக்கோள் தொழில்நுட்பம்

Editorial   / 2018 ஜூன் 20 , பி.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலநிலை மாற்றங்களால் நாட்டின் நெல் உற்பத்தியில் ஏற்படும் தாக்கங்களைக் குறைப்பதற்கு செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தினை உபயோகிப்பதற்கு தேவையான தொழிநுட்ப உதவிகளை வழங்க தயாராக உள்ளதாக, சர்வதேச நெல் ஆராய்ச்சி நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி மெத்திவ் மொரல் தெரிவித்துள்ளார்.

 

கலாநிதி மெத்திவ் மொரல் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழு நேற்று (19)  ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த சந்தர்ப்பத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பிராந்திய நாடுகள் எதிர்நோக்கியுள்ள காலநிலை மாற்றங்களுக்கு மத்தியில் தேசிய நுகர்வுக்கான நெல் உற்பத்தியில் தன்னிறைவு அடைவதன் முக்கியத்துவத்தை அவர் இதன்போது குறிப்பிட்டார்.

இலங்கை நெல் உற்பத்தியின் தரத்தை மேம்படுத்துவதற்கும் அறுவடைக்குப் பின்னரான சேதங்களை குறைப்பதற்குமான நவீன தொழில்நுட்ப உதவிகளை வழங்க கமநல சேவைகள் திணைக்களத்துடன் இணைந்து செயற்பட தயாராக உள்ளதாக தெரிவித்த கலாநிதி மொரல்,  நெல் உற்பத்திகளின் பெறுமதிசேர் செயற்பாடுகளை மேம்படுத்துவதற்கும் நவீன தொழில்நுட்ப முறைகளை அறிமுகப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி, கடந்த காலத்தில் எதிர்நோக்க நேர்ந்த காலநிலை மாற்றங்களால் நாட்டின் நெல் உற்பத்தியில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அந்த சவால்களை எதிர்கொண்டு நாட்டை நெல் உற்பத்தியில் தன்னிறைவு அடையச் செய்வதே தமது நோக்கமெனத் தெரிவித்த ஜனாதிபதி, அதற்குத் தேவையான தொழில்நுட்ப அறிவையும் அனுபவங்களையும் ஏனைய வலய நாடுகளுடன் பரிமாறிக்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X