2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பகடிவதைக்கு உள்ளானவர்களுக்கு மீண்டும் கல்வி வாய்ப்பு

Kamal   / 2020 ஜனவரி 18 , பி.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

பகடி வதை காரணமாக பல்கலைக்கழக கற்கைச் ​ செயற்பாடுகளை இடைநிறுத்திச் சென்ற மாணவர்களுக்கு மீண்டும் பல்கலைக்கழகத்தில் கற்கைச் செயற்பாடுகளை முன்னெடுக்கும் வாய்ப்பை பெற்றுக்கொடுப்பது தொடர்பாக அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. 

அதற்காக பல்கலைக்கழக உபவேந்தர்கள்  அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதோடு, அடுத்த மூன்று மாதங்களுக்குள் அந்த குழுவின் அறிக்கை அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் சமர்பிக்கப்பட வேண்டுமெனவும் அறிவுறுத்தபட்டுள்ளது. 

கடந்த 2018 ஆம் ஆண்டில் மாத்திரம் உடல், மன ரீதியால் பகடி வதைக்கு உள்ளாக்கப்பட்ட 2000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழக கல்வியை இடை நிறுத்தியுள்ளதாகவும்,  அவர்களில் சிலர் தற்கொலை செய்துகொண்டுள்ளதுடன், அங்கவீனமானவர்கள் தொடர்பாகவும் தகவல் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X