2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பசில் உள்ளிட்ட நால்வர் விடுதலை

J.A. George   / 2020 நவம்பர் 30 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

திவிநெகும தொடர்பான வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வர் கொழும்பு மேல் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின்போது, திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்துக்கு சொந்தமான நிதியை முறைக்கேடாக பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் இவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த நிலையில் வழக்கு விசாரணைகளை அடுத்து, அவர்கள் இன்று(30) விடுவிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக, இந்த வழக்கில் பசில் ராஜபக்ஷவுக்கு விதிக்கப்பட்டிருந்த வௌிநாட்டு பயணத் தடை கடந்த 23 ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் நீக்கப்பட்டது.

அத்துடன்,  3 மாதங்களுக்கு ஒரு தடவை குற்றப்புலனாய்வில் ஆஜராக வேண்டும் என விதிக்கப்பட்ட பிணை நிபந்தனையையும் தளர்த்தப்பட்டிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .