2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பச்சைக்குப் பரிகாரம்

Editorial   / 2017 நவம்பர் 16 , மு.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது வலது கையில் புத்தரின் உருவத்தை பச்சை குத்தியிருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட பிரித்தானிய பெண்ணினது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும், இதற்காக இலங்கை அரசாங்கம் 8 இலட்சம் ரூபாயை நட்டஈடாகச் செலுத்த வேண்டுமெனவும் மேன்முறையீட்டு நீதிமன்றம், நேற்று (15) தீர்ப்பளித்தது. 

அந்த 8 இலட்சம் ரூபாயில் 50 ஆயிரம் ரூபாயை, குறித்த பிரித்தானியப் பெண்ணைக் கைது செய்த பொலிஸார் இருவரும், தலா 50,000 ரூபாய் வீதம் குறித்த பெண்ணுக்கு நட்டஈடாகச் செலுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

அத்துடன், வழக்குச் செலவுக்காக அரசாங்கம் 2 இலட்சம் ரூபாயைச் செலுத்த வேண்டும்.

கடந்த 2014ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த குறித்த பெண்ணின் வலக்கையில் புத்தரின் உருவம் பச்சை குத்தப்பட்டிருப்பதாகத் தெரிவித்து, அவர் கைதுசெய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டிருந்தார். 

பௌத்த மதத்தின் மீது தனக்குள்ள கௌரவம், மரியாதை காரணமாகவே தான் இவ்வாறு பச்சை குத்தியதாக, அந்தப் பெண் தெரிவித்திருந்தார். 

 குறித்த சம்பவம் மூலம் தனது அடிப்படை உரிமை மீறப்பட்டதாகத் தெரிவித்து, கட்டுநாயக்க விமான நிலையப் பொலிஸார் இருவர், குடிவரவு-குடியகல்வு அதிகாரிகள் மற்றும் நீதிபதி ஆகியோரைப் பிரதிவாதிகளாகக் குறிப்பிட்டு, குறித்த பெண், மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .