2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பணிப்புறக்கணிப்புக்கு தயாராவதால் பரீட்சையை வேறொரு திகதிக்கு மாற்றுமாறு கோரிக்கை

Editorial   / 2018 ஜூலை 22 , பி.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்வி துறையில் அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளானவர்களுக்காக தீர்வினை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட  குழுவின் பரிந்துரைக்கமைய, சட்டரீதியற்ற நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர்கள், அதிபர்கள், கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள்  உள்ளிட்ட அதிகாரிகள் அனைவரும் ஒன்றிணைந்து, எதிர்வரும் 26ஆம் திகதி பணிபுறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

குறித்த 26ஆம் திகதி பாடசாலை மட்ட பரீட்சைகள் நடைபெறுவதால், குறித்த தினத்தில் நடைபெறவிருக்கும் பரீட்சைகளை வேறொரு தினத்தில் நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, சகல மாகாண பணிப்பாளர்கள் மற்றும் கல்வி அமைச்சிடம் கல்வி பாதுகாப்பு தொழிற்சங்க ஒன்றியம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே குறித்த தினத்தில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு ஏற்படும் அசெளகரியத்தை தவிர்த்துக்கொள்ளுமாறும்,  எனவே குறித்த தினத்தில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள பரீட்சையை வேறொரு நாளுக்கு மாற்றுமாறும் கல்வி பாதுகாப்பு தொழிற்சங்க ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த பணிப்புறக்கணிப்பு தொடர்பில் பாடசாலை மாணவர்களின் பெற்றோரைத் தெளிவுப்படுத்தி துண்டுபிரசுரம்  வழங்கும் நடவடிக்கையானது நாளைய தினம் மருதானை புகையிரத நிலையத்துக்கு அருகில் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், நாடுபூராகவும் இவ்வாறு துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .