2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

போத்தலை உடைத்து உட்கொண்ட நபர்!

Editorial   / 2020 செப்டெம்பர் 18 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

போத்தலை உடைத்து அதை உணவாக உட்கொண்ட நபரை பொதுமக்கள் மீட்ட சம்பவம் வவுனியாவில் நேற்று (17) இடம்பெற்றது.

வவுனியா வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள வீதியில் அமர்ந்திருந்த நபர் ஒருவர், கண்ணாடி போத்தலை உடைத்து அதனை வாயில்போட்டு உணவாக உட்கொண்டுள்ளார். 

இதனால் காயமடைந்து வாயிலிருந்து குருதி வெளியேறிய நிலையிலும் குறித்த நபர் அதனை உட்கொள்வதை நிறுத்தவில்லை.  

இதனை அவதானித்த சிலர் வைத்தியசாலையில் கடமையில் இருந்து பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர். 

சம்பவத்தை அவதானித்த பொலிஸார் குறித்த நபரை அவ்விடத்திலிருந்து அகற்றினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .