2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

போதைப்பொருள் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

Editorial   / 2019 டிசெம்பர் 08 , பி.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

போதைப்பொருள் தொடர்புடைய வழக்குகள் கடந்த நான்கு வருடங்களில் நூற்றுக்கு 50 வீதத்தால் அதிகரித்துள்ளதாக அரச இரசாயன பகுப்பாய்வாளர் ஆரியனந்த வெலிஅங்க தெரிவித்துள்ளார்.

இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தில் காணப்படும் அதிகாரிகள் வெற்றிடம் காரணமாக இரசாயன பகுப்பாய்வு அறிக்கைகளை வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்திற்கு சமர்ப்பிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் வெற்றிடங்கள் நிலவும் பதவிகளுக்கென 31 பேரை புதிதாக இணைத்துக்கொள்வதற்கு அரச அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

புதிய அதிகாரிகள் சேவையில் இணைக்கப்பட்டதன் பின்னர் அரச இரசாயன பகுப்பாய்வு அறிக்கைகளை துரிதமாக நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்க முடியுமென அரச இரசாயன பகுப்பாய்வாளர் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .