2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

’பதிவு செய்தாலும் செய்யாவிட்டாலும் உதவிகள் வழங்கப்படும்’

Editorial   / 2018 மே 27 , பி.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீரற்ற வானிலையால் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்கள் பதிவுகளை மேற்கொண்டாலும் மேற்கொள்ளாவிட்டாலும் அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குமாறு, நீர் முகாமைத்து மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் துமிந்த திஸாநாயக்க அரச அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

புத்தளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகள் தொடர்பில் ஆராயும் பொருட்டு அங்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர், அரச அதிகாரிகளுடனான சந்திப்பில் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக திடீர் அனர்த்த நிலையை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடிந்துள்ளதாக அமைச்சர் துமிந்த திசநாயக்க தெரிவித்துள்ளார்.

அனர்த்தத்தை எதிர்கொள்ளும் வகையில் கடந்த 21ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 3ஆம் திகதி வரையான இரண்டு வார காலப்பகுதி அனர்த்த வாரமாக பிரகடனப்படுத்தப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சீரற்ற காலநிலையினால் சேதமடைந்த வீடுகள், மற்றும் வர்த்தக நிலையங்களை சீர் செய்வதற்காக பத்தாயிரம் ரூபாய் முற்பணமாக வழங்கப்படவுள்ளது.

இதற்காக நான்கு கோடி ரூபாய் நிதியை அரசாங்கம் ஒதுக்கிருப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .