2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘பயங்கரவாதத்துடன் தொடர்பில்லாதவர்களை விடுதலை செய்யவும்’

Editorial   / 2019 ஜூன் 20 , பி.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னர், சிறு சிறு குற்றங்கள் தொடர்பில், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள, சந்தேகநபர்கள் தொடர்பான விசாரணையை துரிதப்படுத்தி, பயங்கரவாதத்துடன் தொடர்பில்லாதவர்களை விடுதலை  செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

தேசிய பாதுகாப்பு சபைக் கூட்டம் நேற்று (19) மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றப் போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு அறிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நடவடிக்கைகள், பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் இதன்போது நீண்ட கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சமய நிகழ்வுகள், பொதுமக்கள் ஒன்று கூடும் இடங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு, தொடர்ந்து நடவடிக்கைகள் எடுப்பதன் முக்கியதுவத்தையும் ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .