2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

பயணத்தடைக்கு மத்தியில் வீடுகளுக்கே மீன்கள்

R.Maheshwary   / 2021 மே 18 , பி.ப. 02:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

பயணத்த​டை அல்லது முடக்கப்பட்டுள்ள பிரதேசங்களிலுள்ள மக்களுக்கு,  அவர்களின் வீடுகளுக்கே சென்று மீன்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு, மீன்பிடி கூட்டுதாபனத்துக்கு மீன்பிடி இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜயசேகர ஆலோசனை வழங்கியுள்ளார்.

அதற்கமைய எந்தவொரு பிரதேசத்திலும் பயணத்தடைகள் விதிக்கப்பட்டு அல்லது முடக்கப்பட்டிருக்குமாயின், அசௌகரியம் இன்றி, சாதாரண விலைக்கு உரிய தரத்துடன் சுகாதார பாதுகாப்புகளுடன் மீனை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் மீன்பிடி இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜயசேகரவின் ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கைக்காக மீன்பிடி கூட்டுதாபனத்தின் நடமாடும் பிரிவு வலுப்படுத்தப்பட்டுள்ளதுடன் மீன்பிடி கூட்டுதாபனத்தின் Ceyfish வர்த்தக நாமத்தின் கீழ்,வழங்கப்படும் நேரடி தொலைபேசி இலக்கம் ஊடாக தொடர்புகொள்ளும் நுகர்வோர் தமக்கு தேவையான மீன் உள்ளிட்டவைகளை முன்பதிவு  செய்துகொள்ள முடியும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X