2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

’பிரித்தானியா இரட்டை வேடம் போடுகிறது’

Editorial   / 2021 பெப்ரவரி 26 , பி.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது நாட்டு இராணுவ வீரர்களை, எந்தவொரு யுத்தக் குற்ற நீதிமன்றங்களிலும் நிறுத்தப் போவதில்லையெனத் தெரிவிக்கும் பிரித்தானியா, எமது நாட்டு இராணுவ வீரர்கள் குறித்து, ஏன் சிந்திப்பதில்லையெனக் கேள்வியெழுப்பிய ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி தொலவத்த, இவ்வாறு இரட்டை மனநிலையுடன் ஏன் செயற்படுகிறார்கள் எனத் தெரியவில்லை என்றார்.

கொழும்பில் அமைந்துள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு முன்பாக, நேற்று (25) நடைபெற்ற அமைதிப் பேரணியில் கலந்துகொண்ட போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், எமது நாட்டுக்கு எதிராக, மனித உரிமைகள் பேரவையில் புதிய யோசனையொன்று நேற்று முன்வைக்கப்பட்டுள்ளதென தெரிவித்த அவர், பிரித்தானிய இராணுவத்தினர் தொடர்பில், சிந்திப்பது குறித்து நாம் மகிழ்ச்சியடையும் அதேவேளை, அப்போது யுத்தத்தில் ஈடுபட்ட வீரர்கள், இலங்கையின் இறையாண்மை குறித்து பிரித்தானியா ஏன் சிந்திப்பதில்லை என வினவினார்.


'யுத்தம் தொடர்பான தகவல்கள் அவர்களுக்கு தெரியாதெனக் கூறமுடியாது; .அனைத்து விடயங்களும் தெரிந்து, தமது இலாபத்துக்காகச் செயற்படுவதாகவே எமக்கு தோன்றுகின்றது. அவர்கள், இலங்கையில் இடம்பெற்றதை யுத்தமெனக் கூறாது, இனப்பிரச்சினைக்கான போராட்டம் என்றே அடையாளப்படுத்துகின்றனர்' என்றார்.

30 வருடங்களாக இடம்பெற்ற யுத்தம், இனப்பிரச்சினை போராட்டம் என்றால் கொழும்பில் எம்முடன் ஒன்றாக அக்காலப்பகுதிகளில் தமிழ் மாணவர்கள் படித்தனர். அப்படியாயின், அது இனவாதப் போராட்டமாக எப்படி அமையும் என்றார்.

'பிரித்தானியா கூறுவதைப் போன்று, வர்க்க ரீதியான, இனரீதியான போராட்டம் ஒன்று இலங்கையில் நடைபெறவில்லை. பயங்கரவாத அமைப்பொன்றை யுத்த ரீதியாகத் தோற்கடித்த யுத்தம் ஒன்றே இலங்கையில் நடைபெற்றது' என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .