2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பாரிய கடன் சுமையில் அரசாங்கம் தத்தளிக்கிறது

Editorial   / 2020 பெப்ரவரி 24 , பி.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்.ஜெயரட்ணம்

ஜனாதிபதி தேர்தலின்போது, பொய்யான வாக்குறுதிகளை மக்களுக்கு அள்ளி வழங்கி,  ஆட்சியை  சூட்சுமமாகக் கைப்பற்றிய    தற்போதைய அரசாங்கம்,  அவற்றை நிறைவேற்ற முடியாமல் பெரும் கடன் சுமையுடன்  தத்தளித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில்,  எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில், மூன்றில் இரண்டு பெரும்பான்மையை மக்களிடம் கோருவது வேடிக்கையானதென, தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட மாநாட்டில், நேற்று (23) பங்கேற்று உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து கருத்துரைத்த அவர், கடந்த 72 வருடங்களாக  வெவ்வேறு பெயர்களிலும் வெவ்வேறு சின்னங்களிலும், நாட்டின்   பிரதான இரண்டு கட்சிகளும் மாறி மாறி ஆட்சி செய்து வந்துள்ளன. 1994 ஆம் ஆண்டு  சந்திரிக்கா அரசாங்கத்தில் அமைச்சரவையில் இடம்பிடித்த சில அமைச்சர்கள்,  இன்று வரை  அமைச்சர்களாகவே இருந்து வருகின்றனர். யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுக்குப் பிரச்சினை இல்லை. அவர்கள் சகல வரப்பிரசாதங்களையும் அனுபவித்தவாறு உள்ளனர் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .