2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘போரால் பாதிக்கப்பட்ட பகுதிகள் புறக்கணிப்பு’

Kogilavani   / 2020 நவம்பர் 25 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

யுத்தத்தால் அழிந்துபோன பகுதிகளை மீளக் கட்டியெழுப்புவதற்குத் தேவையான எந்தவித நிதி ஒதுக்கீடுகளையும் அரசாங்கம் செய்யவில்லை​ எனக் குற்றஞ்சாட்டிய செல்வராசா கஜேந்திரன் எம்.பி, இரண்டாம் பட்சமாகவே அப்பகுதிகளை அரசாங்கம் பார்க்கிறது என்றார். 

மாகாணசபை ஊடாக முன்னெடுக்கப்பட வேண்டிய பணிகளை, மாவட்டச் செயலகங்கள் ஊடாக முகவர்களை வைத்துக்கொண்டு செய்யும் வேலைத்திட்டத்தை அரசாங்கம்  உடனடியாகக் கைவிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட அவர், இவ்வாறான திட்டமிட்ட நடவடிக்கைகள் மூலம், அரசாங்கம் மாகாண சபைகளை  வினைத்திறன் ​அற்றதாக்குகின்றது எனக் குற்றஞ்சாட்டினார்.

 “வடக்கு மாகாணத்தில் பெருமளவான அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது. வடக்கில் மட்டும், கணவரை இழந்த நிலையில் பெண்கள் தலைமை தாங்கும் 60,000 குடும்பங்கள் உள்ளன. இக்குடும்பங்கள், அவற்றிலுள்ள மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளைக் கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டங்களும்  கிடையாது. 

“அமைச்சுகளினால் அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகள், வடக்கு, கிழக்கில் உள்ள தமிழர்களுக்கு உரிய வகையில் கிடைப்பதில்லை. இந்தப் பயிற்சிகள், சிங்கள மொழியிலேயே நடத்தப்படுகின்றன. எனவே, இந்தப் பயிற்சிகளையும் தமிழ் வளவாளர்களைப் பயன்படுத்தி நடத்த வேண்டும்.

“மாகாண நிர்வாகத்துக்குத் தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். மத்திய அரசாங்கத்திலிருந்து மாகாண நிர்வாகங்களுக்கு வரும் கடிதங்கள், சிங்கள மொழியில் வருகின்றன. இதனால், உத்தியோகத்தர்களுக்கு தங்களது கடமைகளைச் செய்வதில் இடையூறு ஏற்படுகின்றது. எனவே, அக்கடிதங்கள் தமிழ் மொழியில் வழங்கப்பட வேண்டும்” எனவும் அவர் வலியுறுத்தினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .