2024 மார்ச் 19, செவ்வாய்க்கிழமை

‘பொருளாதாரத்தை சரிக்காத கொள்கைத் திட்டமே முன்னெடுப்பு’

Niroshini   / 2021 மே 06 , மு.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பா.நிரோஸ்

நாட்டில் பொருளாதாரத்தை வீழ்ச்சியடைச் செய்யாது, கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான பணிகளை  முன்னெடுப்பதே  அரசாங்கத்தின் கொள்கை எனத் தெரிவித்த சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, வருட இறுதிக்குள் நாட்டு மக்களின் 60 சதவீதமானோருக்குத் தடுப்பூசி செலுத்தப்படுமெனவும் தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தால், பிசிஆர் பரிசோதனைகளை முன்னெடுக்கவும் கொரோனாவுக்கு எதிரான மருந்துகளைக் கொள்வனவு செய்வதற்கும், தொற்றாளர்களை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்வதற்கும் நிதி இல்லாத நிலை ஏற்படுமெனவும் தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரத்தைப் பாதுகாத்துக்கொண்டு, கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் முறையையே உலக நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன என்றும் எடுத்துரைத்த அமைச்சர், இவ்வருட இறுதிக்குள், நாட்டு மக்களில் 60 சதவீதமானோருக்கு, கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தப்படுமெனவும் தெரிவித்தார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X