2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

பளையில் 35 அடி ஆழமான பதுங்கு குழி

Editorial   / 2018 ஏப்ரல் 25 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் யுத்தகாலத்தின் போது பயன்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் பதுங்குக் குழியொன்று பாதுகாப்புப் பிரிவினரால், பளை - அரசங்கேணி பகுதியில் கண்டறியப்பட்டுள்ளது. 

அரசங்கேணி பகுதியில் மீள்குடியேறிய நபரொருவர் தமது காணியை பார்வையிட்ட போதே, குறித்த பதுங்கு குழியொன்று இருப்பதை கண்டுள்ளார். அது குறித்து, அப்பகுதியிலுள்ள இராணுவ முகாமுக்கு அவர் அறிவித்துள்ளார். அதன் பின்னர் இராணுவ அதிகாரிகள் சிலர் குறித்த இடத்துக்கு வ​ருகைதந்து பதுங்கு குழியைச் சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். 

விடுதலைப் புலிகள் அமைப்பினர் யுத்தகாலப்பகுதியில் தாக்குதல்களில் இருந்து தப்புவதற்காக, 35 அடி ஆழத்தில் குறித்த பதுங்கு குழியைத் தோண்டியுள்ளதுடன், இதன் மேற்பரப்பில் கொங்கீரிட் இட்டு மூடியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

இந்தப் பதுங்கு குழியிருக்கும் இடத்தில், விடுதலைப் புலிகள் அமைப்பின் முகாம் இருந்திருக்கலாம் எனவும் இராணுவத்தினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். 

இதனை மூட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X