2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

பாக்.பிரதமருடனான முக்கிய சந்திப்புகள் இரத்து

Editorial   / 2021 பெப்ரவரி 23 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இன்றுமாலை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இந்நிலையில், அருவடை நடத்தப்படவிருந்த முக்கிய சந்திப்புகள் இரத்து செய்யப்பட்டுள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியூதீன் ஆகியோருடன் முக்கிய சந்திப்பு நடத்தப்படவிருந்தது.

எனினும், அந்த சந்திப்புகள் இரண்டும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு காரணங்களுக்காகவே இவ்விரு சந்திப்புகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .