2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

பாடசாலைக்கு செல்லாத சிறார்களை இனங்காணும் செயற்திட்டம்

Editorial   / 2018 ஜனவரி 22 , பி.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.யூ.எம். சனூன்

புத்தளம் கல்வி வலயம் மற்றும் புத்தளம் பிரதேச செயலக பிரிவுகளுக்குட்பட்ட பிரதேங்களில் வதியும் பாடசாலைக்கு செல்லாத சிறுவர்களை இனங்கண்டு அவர்களை பாடசாலைக்கு சேர்க்கின்ற திட்டம் முன்னெடுக்கப்பட்டு  வருகிறது.

புத்தளம் வலயக் கல்வி பணிமனை, புத்தளம் பிரதேச செயலகம், முள்ளிபுரம் கிராம சேவையாளர் பிரிவின் பொருளாதார அபிவிருத்தி அமைப்பு, ஒடெப்ட், ச்சேஞ்ச் மற்றும் ப்ரண்ட்ஸ் ஆகிய தொண்டு நிறுவனங்கள் இணைந்து இந்த செயற்திட்டத்தினை முன்னெடுத்துள்ளன.

இதன் முதல் கட்ட செயற்பாடு கடந்த வெள்ளிக்கிழமை (19) காலை புத்தளம் முள்ளிபுரம் பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது இவ்வாறு பாடசாலை செல்லாத  20 சிறார்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

புத்தளம் வலயக் கல்வி பணிமனையின் கல்வித் திட்ட பணிப்பாளர் பண்டார, ஆசிரிய ஆலோசகர் எம்.எம். முஹம்மது, முள்ளிபுரம் கிராம சேவையாளர் பிரிவின் பொருளாதார அபிவிருத்தி அதிகாரி எம்.என். ஹஸ்மத் உள்ளிட்ட தொண்டு நிறுவன அதிகாரிகளும் இதில் கலந்து கொண்டனர்.

குடும்ப சூழ்நிலை காரணமாக பாடசாலையிலிருந்து இடைவிலகிய மாணவர்கள், பெற்றோர்களால் பாடசாலைக்கு சேர்க்கப்படாத  சிறுவர்கள் பலர் இதன் போது இனங்காணப்பட்டுள்ளனர்.

இத்தகைய மாணவர்களையும், அவர்களது பெற்றார்களையும் புத்தளம் பொலிஸ் நிலைய சமுக விவகார பிரிவுக்கு வரவழைத்து அவர்களது பிரச்சினைகள் தொடர்பாக தீர விசாரித்து குறித்த மாணவர்களை மீண்டும் பாடசாலைக்கு சேர்த்துக்கொள்வதற்காக இத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

1950 ஆம் ஆண்டு காலப்பகுதியில் புத்தளம் நகரில் "டக்குபர்" என்கின்ற பதவியோடு செயற்பட்ட அரச அதிகாரிகள் இத்தகைய பிள்ளைகளை இனங்கண்டு அவர்களின் பெற்றார்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்து குறித்த மாணவர்களை பாடசாலைக்கு சேர்க்கின்ற நடவடிக்கைளில் செயற்பட்டுள்ளார்கள் என்பது புத்தளம் நகர வரலாற்று சாதனையாகும். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .