2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

பாதம் பதிந்துள்ள கல் கல்கந்தவில் உள்ளது

Editorial   / 2018 ஜனவரி 22 , மு.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சதீஸ்  
கருக்கல்லொன்றில் இரண்டு அல்லது மூன்று அங்குலம் ஆழத்தில் பதியப்பட்டுள்ள. மனிதனின் வலது  கா​லொன்றுக்குரிய பாதத்தின் சுவடு கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அந்தப் பாதத்தின் சுவடை கழுவி, மஞ்சள் பூசிய, பக்திபரவசத்துடன், பத்திகளை கொளுத்தி, தேசிக்காய் வைத்து அப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.  

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, காட்மோர், பிரேக்மோர் தோட்டத்தில் கல்கந்த பிரிவில் உள்ள கற்பாறையொன்றின் மீதே, இந்தக் கால் பாதத்தின் சுவடு காணப்படுகின்றது.   

இந்தப் பாதத்தின் சுவடு, யாரால் எப்போது கண்டறியப்பட்டது என்பது தொடர்பில் உரிய தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. என்றாலும், இந்த விவகாரம் தொடர்பில், மஸ்கெலியா பொலிஸாரின் கவனத்துக்கு, சனிக்கிழமை மாலை கொண்டு செல்லப்பட்டது.  

இதேவேளை, இந்த மலைப்பகுதியில் சக்திமிக்க காளி​கோவிலொன்றும் இருப்பதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.   

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பில் தொல்பொருள் ஆராய்ச்சி நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் ​மஸ்கெலியாக பொலிஸார் தெரிவித்தனர்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X