2024 மார்ச் 28, வியாழக்கிழமை

பாதுகாப்பு வசதிகளை விரிவுபடுத்த குழுக்கள் நியமனம்

Editorial   / 2017 ஒக்டோபர் 19 , மு.ப. 01:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

குழந்தைகளுக்கான பகல் நேர பாதுகாப்பு வசதிகளை விரிவுபடுத்தல் மற்றும் விருத்தி செய்தல் முகமாக, அரச, மாகாண சபைகள், அரச சார்பற்ற மற்றும் தனியார் ஆகிய துறைகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. 

தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் எனும் ரீதியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த யோசனைகளுக்கே அமைச்சரவை அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது. 

சாதாரண விலையில் பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில், உயர் தரத்திலான குழந்தைகள் பகல் நேர பாதுகாப்பு வசதிகளை நாட்டினுள் அபிவிருத்தி செய்வதன் மூலம், விசேடமாக உயர் கல்வி மட்டத்தைக் கொண்ட குறிப்பிடத்தக்களவு மகளிரின் பங்களிப்பை நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக பயன்படுத்த முடியும் என்பதால், இப்பிரிவை மேலும் விருத்தி செய்வதற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என அரசாங்கம் இனங்கண்டுள்ளது. 

மகளிர், சிறுவர் விவகாரங்கள் அமைச்சின் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் தற்போது இலங்கையில் அரச, தனியார் பிரிவுகளின் மூலம் முன்னெடுக்கப்படுகின்ற 1,200 பகல் நேர பாதுகாப்பு நிலையங்களில் 24,000 சிறுவர்கள் பாராமரிக்கப்படுவதாக இனங்காணப்பட்டுள்ளது.  

அதனடிப்படையில், இத்துறையில் காணப்படுகின்ற பிரச்சினைகளை இனங்கண்டு இலங்கையில் சிறுவர் பகல் நேர பாதுகாப்பு வசதிகளை மேலும் விரிவுபடுத்துவது, விருத்தி செய்வது தொடர்பில் ஆராய்வதற்காக அரச, மாகாண சபைகள், அரச சார்பற்ற மற்றும் தனியார் ஆகிய துறைகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவை நியமிப்பது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த யோசனைகளுக்கே அமைச்சரவை அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X