2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘பாதுகாப்புக்காக மாணவர்களிடம் பணம் வசூலிக்கப்படுவதாகப் புகார்’

Editorial   / 2019 மே 17 , மு.ப. 08:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

சி. அமிர்தப்பிரியா   

நாட்டில் நிலவுகின்ற அசாதாரண சூழ்நிலைகளிலும், பாடசாலைகளுக்கு மாணவர்களின் வருகையில் ஓரளவுக்கு முன்னேற்றம் எற்பட்டுள்ளது. அதனை அதிகரிப்பதற்கு பெற்றோரும் கல்வியமைச்சும் ஊக்குவிக்க வேண்டுமெனக் கோரியுள்ள இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், பாதுகாப்பை காரணங்காட்டி, மாணவர்களிடமிருந்து சில பாடசாலைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக தெரிவித்தார்.

கொழும்பு உள்ளிட்ட வெளிமாவட்டங்களின் பாடசாலைகளில் மாணவர் வரவானது நேற்று (16), 20 சதவீதம் அதிகரித்துள்ளதுமையை அவதானிக்க முடிந்தது எனத் தெரிவித் அவர், அதனை அதிகரிக்கவேண்டும் என்றார்.   

சில பாடசாலைகளின் நிர்வாகம், மாணவர் பாதுகாப்புக்கெனக் கூறி, பாதுகாப்பு கமெராக்கள், மின் விளக்குகள் (Flash Light) ஆகியனவற்றை கொள்வனவு செய்யவேண்டுமெனத் தெரிவித்து, மாணவர்களிடம் பெருந்தொகையில் பணம் அறவிட்டு வருகின்றதென குற்றஞ்சாட்டி அவர், இது கண்டிக்கத்தக்கது. அவை தொடர்பில், கல்வியமைச்சு நடவடிக்கை எடுக்கவேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .