2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பாராளுமன்றம் கூடுமா? கூடாதா?

Editorial   / 2021 ஜனவரி 18 , மு.ப. 02:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாராளுமன்றத்தில் அண்மையில் செய்து கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் பிரகாரம், பாராளுமன்ற பணியாள் தொகுதி, பாதுகாப்புப் பிரிவு, பாராளுமன்ற வளாகத்துக்கு வெளியே இருக்குமு் பாதுகாப்பு வலயம், இணைந்த சேவையில் இருப்போர் என ஒன்பது கொவிட்-19 நோய் தொற்றியிருப்பது உறுதியானது என அரசாங்கத் தகவல் திணைக்களம் அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், பணியாளர்கள் அடங்கலாக 943 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

அதில், பணியாளர்கள் ஒன்பது பேருக்கு தொற்று உறுதியானது. பி.சி.ஆர் பரிசோதனைகளைச் செய்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் 32 பேர் அடங்களாக ஏனையோருக்குத் தொற்றில்லை என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த பி.சி.ஆர் பரிசோதனைகள் யாவும்,புதன்கிழமையும் (13) வெள்ளிக்கிழமையும் (15) முன்னெடுக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. 

இதேவேளை, அடுத்த பாராளுமன்ற அமர்வு தொடர்பில், இன்றைய கூட்டத்திலேயே தீர்மானிக்கப்படவுள்ளது. பாராளுமன்றத்தின் இவ்வாரத்துக்கான அமர்வை, 19ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரையிலும் நடத்துவதற்கு, ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X