2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

பிணை மறுப்பிற்கு எதிராக அர்ஜுன் அலோசியஸ் மனு

Editorial   / 2018 மார்ச் 21 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

பர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அந்த நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மீள்பரிசீலனை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளனர்.

தமக்கு பிணை வழங்குமாறு கோரியே இருவரும் குறித்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.     

குறித்த மனுவில்  பொதுச் சொத்து சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தமக்கு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் பிணை மறுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும் தமக்கு எதிராக இரகசிய பொலிஸாரால் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கைக்கு அமைய பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் தாம் எவ்வித தவறையும் இழைக்கவில்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் தமக்கு பிணை வழங்க மறுக்கப்பட்ட விடயத்தை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர்கள் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறி கொடுமக்கல் வாங்கல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அர்ஜுன் எலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோர் எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .