2024 மார்ச் 28, வியாழக்கிழமை

பிணைமுறி விவகாரம் : பிரதமர் உட்பட 20 பேர் சாட்சிகளாகப் பெயரிடப்பட்டனர்

Editorial   / 2017 ஒக்டோபர் 23 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய வங்கியின் பிணைமுறி விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்திவரும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில், சட்டமா அதிபர் திணைக்களத்தால் சாட்சிகளாகப் பட்டியல் வழங்கப்பட்டுள்ள 20 பேரின் பெயர்களில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பெயரும் உள்ளடங்குகிறது.

ஆணைக்குழு முன் எழுந்துள்ள சில விடயங்கள் குறித்தும், தெரிவிக்கப்பட்ட கருத்துகள் குறித்தும் வெளிப்படுத்துவதற்காக, இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது எனத் தெரியவருகிறது.

பிணைமுறி ஆணைக்குழு, தனது சாட்சியமளிப்பு நடவடிக்கைகளை, கடந்த வாரம் நிறைவுசெய்திருந்தது. ஆனால் தேவையாயின், சாட்சிகளை அழைப்பதற்கு இயலுமென, ஆணைக்குழு அறிவித்திருந்தது.

ஏற்கெனவே, பிணைமுறி விவகாரம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம், கேள்விகள் அனுப்பப்பட்டிருந்தது. இதற்கான பதில்கள், கடந்த வெள்ளிக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டன என அறிய முடிகிறது.

இதேவேளை, இவ்வாணைக்குழுவின் ஆயுட்காலம், இம்மாதம் 27ஆம் திகதியுடன் நிறைவடைகின்ற நிலையில், கால நீடிப்புக்கான கோரிக்கையொன்றை, அவ்வாணைக்குழு முன்வைத்துள்ளது எனத் தெரிகிறது.

இது தொடர்பாக ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோவிடம் கேட்டபோது, அக்கோரிக்கையை இன்னமும் பார்த்திருக்கவில்லை எனவும், இது தொடர்பாக இன்று (23) ஆராய்ந்து, இக்கோரிக்கை தொடர்பாக ஜனாதிபதியுடன் கலந்துரையாடவுள்ளார் என்று தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X