2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம்

Editorial   / 2018 மார்ச் 19 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் ரணில் விக்கிர​மசிங்கவுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானம், மிகவும் வலுவானதாகக் காணப்படுகிறதெனக் குறிப்பிட்ட சமூக நலத்துறை அமைச்சர் எஸ்.பீ.திசாநாயக்க, இந்தத் தீர்மானத்துக்கு, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் போன்று, ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் பலரும் ஆதரவு தெரிவிக்கவுள்ளனரெனக் குறிப்பிட்டார்.

இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் பின்னர், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கடசிக்குள், பாரிய மாற்றமொன்று ஏற்படுமெனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

வலப்பன, லியன்வெல பிரதேசத்தில், புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சமுர்த்தி மாதிரிக் கிராமத்தின் திறப்பு விழா, நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதேவேளை, மேற்படி நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் கையெழுத்திடத் தவறிய ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இன்றைய தினம் (19), கையெழுத்திடவுள்ளனர்.

இது தொடர்பான பேச்சுவார்த்தையொன்று, இன்றும் (19) நாளையும் (20), ஒன்றிணைந்த எதிரணியினரிமையே மேற்கொள்ளப்படுமென, எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .