2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

’பிரதமர் அவகாசம் கேட்பது ஏன்?’

Editorial   / 2018 மார்ச் 21 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊழல், மோசடியில் ஈடுபட்டவர்களைத் தாங்கள் பாதுகாக்கவில்லை​யெனில், கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்கு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ​கால அவகாசம் கேட்பது ஏனென, ஜே.வி.பியின் எம்.பியான பிமல் ரத்நாயக்க கேள்வி கேட்டார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (20) வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது, பிமல் ரத்னாயக்க எம்.பி, பாரிய மோசடிகள் மற்றும் ஊழல்கள் பற்றி விசாரணை செய்வதற்கான ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு 2015ஆம் ஆண்டு தொடக்கம் 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30ஆம் திகதி வரை கிடைத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை வருடாந்த அடிப்படையில் வெவ்வேறாக எவ்வளவு என்பதைக் குறிப்பிடுமாறு கேட்டிருந்தார்.

கேள்விகளுக்குப் பதிலளித்துகொண்டிருந்த ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான கயந்த கருணாதிலக்க, இக்கேள்விக்குப் பதிலளிப்பதற்கு, ஒரு மாத கால அவகாசத்தை பிரதமர் கோரியுள்ளார் என்றார்.

இதன்போதே, பிமல் ரத்நாயக்க மேற்கண்டவாறு ​கேள்வியெழுப்பினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X