2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘பிரிகேடியரை நாட்டுக்கு அழைத்தது இராஜதந்திர செயற்பாடு’

Editorial   / 2018 பெப்ரவரி 22 , பி.ப. 01:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

சின்னசாமி ஷிவானி

பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றி பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோவை  நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுத்துள்ளதுடன், இது இராஜதந்திர மட்டத்தில் மேற்கொள்ளப்படும் ஒரு செயற்பாடாகுமெனத் தெரிவித்த இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து,  “இது, எவருடைய அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் மேற்கொள்ளப்பட்டது ஒன்றல்ல” என்றார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பு, அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (21) இடம்பெற்றது. இதன்போது ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ​அவர்,  

“பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படமாட்டது. அவர் நாட்டுக்கு அழைத்து வரப்படுவதானது விசாரணைகளுக்காக அல்ல. இராஜதந்திர ரீதியில் அவரை நாட்டுக்கு அழைத்து வருவதானது சாதாரண செயற்பாடாகும். கலந்துரையாடலை மேற்கொள்ளும் பொருட்டே பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோவை  நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்.

அதனைத்தவிர எவ்வித அச்சுறுத்தலுக்கும் மத்தியில் இந்தச் செயற்பாடு முன்னெடுக்கப்படவில்லை. புலம்பெயர் அமைப்புகளும் தமக்கு கோரிக்கை முன்வைக்கவில்லை. பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் அழைத்துவரப்படுகிறார். இது இராஜதந்திர ரீதியில் இடம்பெறும் வழமையான நடைமுறையாகும்” எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றி வந்த இலங்கை பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ, இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்தன்று பிரித்தானியத் தூதரகத்துக்கு முன்னால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்தவர்களை  அச்சுறுத்தும் வகையில் சமிக்ஞை செய்திருந்ததாக, கடந்த சில நாட்களாக சர்ச்சை ஏற்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .