2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பதவி விலகல்

ஆர்.மகேஸ்வரி   / 2018 பெப்ரவரி 22 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் அமாரி விஜயவர்தன மார்ச் மாதம் 30ஆம் திகதியுடன் தனது பதவியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்து, பதவி விலகல் கடிதத்தை  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.

கடந்த அரசாங்கத்தில்  இரு நாடுகளுக்கிடையேயான நட்புறவில் ஏற்பட்ட விரிசலை சுமூகமாக்கவதற்காகவே நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்தவுடன், பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக அமாரி நியமிக்கப்பட்டார்.

எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்துடன், அமாரி விஜயவர்தனவின் 2 வருட பதவிக்காலம் நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .