2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

பிலிப்பைன்ஸ் வாழ் இலங்கையர் நலன்பேண நடவடிக்கை

Editorial   / 2019 ஜனவரி 18 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிலிப்பைன்ஸ் நாட்டுக்கான தனது பயணத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய இலங்கை - பிலிப்பைன்ஸ் நட்புறவின் மூலம், பிலிப்பைன்ஸில் வாழும் இலங்கையர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து, அவர்களின் நலன்பேணல்களுக்குத் தேவையான மேலும் பல நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு அரசமுறை பயணமொன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதிக்கும் பிலிப்பைன்ஸில் வாழும் இலங்கையர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று, மனிலா நகரில் நேற்று (17) இடம்பெற்றபோதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

உயர் கல்விபெறும் மாணவர்கள், தொழில்வல்லுநர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டதுடன், அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி ஜனாதிபதியிடம் எடுத்துக் கூறினர்.

உயர் கல்விபெறும் மாணவர்களின் பிரச்சினைகள், விசா பெற்றுக்கொள்வதில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் போன்ற விடயங்கள் இதன்போது முன்வைக்கப்பட்டன.

இந்த அனைத்து பிரச்சினைகளையும் பிலிப்பைன்ஸுக்கான இலங்கைத் தூதுவரிடம் முன்வைக்குமாறு குறிப்பிட்ட ஜனாதிபதி, பிலிப்பைன்ஸ் அரசாங்கத்துடன் கலந்துரையாடி, இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மேற்கொள்ள முடியுமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாகத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X