2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பிளாஸ்டிக்கை எதிர்த்து மூன்று பேர் இராஜினாமா

Kogilavani   / 2017 ஜூன் 28 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

தரம்-4 மற்றும் தரம்-5 ஆகிய மாணவர்களுக்கு, பிளாஸ்டிக் நாற்காலி மற்றும் மேசையை கொள்வனவு செய்வதற்கான வேலைத்திட்டத்தில், தொழில்நுட்ப மதிப்பீட்டை மேற்கொள்ளும் குழுவிலிருந்து உறுப்பினர்கள் மூவர் இராஜினாமா செய்துள்ளனர்.   

1.930 பில்லியன் ரூபாய் செலவிலேயே, இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. ஐந்து பேர் கொண்ட தொழில்நுட்ப மதிப்பீட்டு குழுவிலிருந்து, மொரட்டுவை பல்கலைக்கழகம், பொறியியல் நிறுவனம் மற்றும் அரச கைத்தொழிற்சாலை திணைக்களம் ஆகியவற்றின் பிரதிநிதிகளே இவ்வாறு இராஜினாமாச் செய்துள்ளனர்.   

தொழில்நுட்ப மதிப்பீட்டு குழுவின் பரிந்துரைகளை, கல்வியமைச்சு கவனத்தில் கொள்வதில்லை என்று கூறியே, அந்த மூவரும் இராஜினாமா செய்துகொண்டுள்ளனர் என, அறியமுடிகிறது.   

பிளாஸ்டிக் நாற்காலி மற்றும் மேசையைப் பயன்படுத்துவதனால், பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்துக்கு கேடுவிளைவிக்கக்கூடிய பிரச்சினைகள் எழுந்துள்ளன. பிளாஸ்டிகின் மீது விழுகின்ற அகச்சிவப்பு ஒளிக்கதிர்கள் மூலம் ஏற்படுகின்ற மாற்றங்கள் தொடர்பிலும் ஆராய்ந்து பார்க்குமாறு அந்தக் குழு பரிந்துரைசெய்துள்ளது.   

இதேவேளை, பிளாஸ்டிக் கதிரைகள் மற்றும் மேசைகள், பாடசாலைகளில் முதல்தடவையாக பயன்படுத்துவதனால், இந்த வேலைத்திட்டம் தொடர்பில், முன்சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும் என்றும் அந்தக் குழு பரிந்துரைசெய்துள்ளது.   

அதுமட்டுமன்றி, பிளாஸ்டிக் மேசைகள் மற்றும் கதிரைகளைப் பயன்படுத்துவதனால், பலகை உற்பத்தி செய்யும் கைத்தொழில்சாலைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் தொடர்பில் அந்தக்குழு தன்னுடைய பரிந்துடைய முன்வைத்துள்ளதுடன் மாற்று யோசனைகளையும் முன்வைத்துள்ளது.   

பிளாஸ்டிக்காலான மேசைகள் மற்றும் கதிரைகள், 10 வருடங்களுக்கு பயன்படுத்த கூடிய வகையில் இருக்கவேண்டும் என்று மதிப்பீட்டு குழுவின் பரிந்துரை, அமைச்சின் கொள்முதல் குழுவினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.   

எனினும், பொறுப்புகூறவேண்டிய காலத்தை 5 வருடங்களாக குறைப்பதற்கு, கொள்முதல் குழு தீர்மானித்துள்ளதாக அறியமுடிகிறது.   

இதேவேளை, பிளாஸ்டிக் கதிரை மற்றும் நாற்காலிகளை உற்பத்தி செய்யும் நிறுவனம், மூன்று வருடங்கள் அனுபவத்தை கொண்டிருக்க வேண்டும் என்ற பரிந்துரையையும் கொள்முதல் குழு நிராகரித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள மதிப்பீட்டுக் குழு, 4 மற்றும் 5 ஆம் தரங்களில் கல்விப்பயிலும் மாணவர்களுக்காக, 12ஆயிரம் வகுப்பறைகளுக்கு, பிளாஸ்டிக் கதிரைகள் மற்றும் நாற்காலிகளை கொள்வனவு செய்வதற்கு கல்வியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக அறியமுடிகின்றது என்றும் அக்குழு தெரிவித்துள்ளது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .