2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘புதிய அமைச்சரவைத் தொடர்பில் பிரதமரும் ஜனாதிபதியும் கலந்துரையாடுவர்’

Editorial   / 2018 டிசெம்பர் 16 , பி.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கலந்துரையாடியே புதிய அமைச்சரவைத் தொடர்பில் தீர்மானிப்பார்களென ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

இன்று ஜனாதிபதி செயலகத்தின் முன்பாக ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியும் பிரதமரும் கலந்துரையாடி புதிய அமைச்சரவையை நியமிப்பர்.அத்துடன் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து புதிய அரசாங்கத்துடன் இணைந்துக்கொள்பவர்களுடன் எவ்வித கலந்துரையாடலையும் இதுவரை முன்னெடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

வீடமைப்பு அமைச்சு செயழிலந்துள்ளது.  அமைச்சில் இருந்த நிதி எங்கே சென்றது என்றுத் தெரியவில்லை. தனக்குக் கிடைத்த தகவல்களுக்கு அமைய, குறித்த நிதி திறைசேறிக்கு அனுப்பப்பட்டு விட்டதாம் என்று தெரிவித்த  சஜித், பல பில்லியன் ரூபாய் நிதியை மீண்டும் திறைசேறியிலிருந்து கொண்டு வரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .