2024 மார்ச் 28, வியாழக்கிழமை

‘புரிந்துணர்வுக்கான சந்தர்ப்பத்தை வழங்குகிறது’

Editorial   / 2017 ஒக்டோபர் 17 , பி.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

“இலங்கையில் இன்று தீபாவளியும் அதன் எதிர்பார்ப்புகள் நிறைந்த தீப ஒளியும் சமூகங்களுக்கு மத்தியில் சிறந்த புரிந்துணர்வுக்கான சந்தர்ப்பத்தை வழங்குகிறது” என, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.  

அவர் விடுத்துள்ள தீபாவளி வாழ்த்து செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,  

“இருள் நேரத்தில் தீபத்தை கையோடு எடுத்துச் சென்றால், அதுவே வழிக்குத் துணையாக அமையும். அதுபோலவே மனிதனுடைய வாழ்க்கைப் பாதையின் பயணத்துக்கும் அருட்தீபம் துணை நிற்கிறது. அத்தகைய அருட் தீபமாகிய ஆன்மீக ஞான ஒளியை இறைவழிபாடு மூலம் பெறமுடியும். அதற்குரிய சிறப்பு வாய்ந்த ஒரு நன்னாளாகவே தீபாவளி அமைந்திருக்கிறது.   

“தீமையையும் அறியாமையையும் நீக்கி ஒளியை வெற்றி கொள்வது மனிதவாழ்வின் முடிவில்லாத தேடலாகும். தீபாவளியும் அதன் எதிர்பார்ப்புகள் நிறைந்த தீப ஒளியும் சமூகங்களுக்கு மத்தியில் சிறந்த புரிந்துணர்வுக்கான சந்தர்ப்பத்தை வழங்குகின்றது. மக்களுக்கு மத்தியில் சுபீட்சத்தை அதிகரித்துள்ளது. மேலும் மிக நீண்டகாலமாக எமது மக்களை பிரித்துவைத்திருந்த எல்லா வேறுபாடுகளையும் களைவதற்குரிய தருணம் அமைந்துள்ளது” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X