2024 மார்ச் 19, செவ்வாய்க்கிழமை

புலி துப்பாக்கியுடன் எஸ்.எப் கைது

Editorial   / 2017 ஓகஸ்ட் 15 , மு.ப. 01:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவராகச் செயற்பட்ட, மிகமுக்கியமானவர் பயன்படுத்தியதாகக் கூறப்படும், ஆயுதத்தை விற்பதற்கு முயன்ற, இராணுவ விசேட படையணியின் (எஸ்.எப்) சார்ஜன்ட், கைது செய்யப்பட்டுள்ளார். 

வெளிநாட்டுத் தயாரிப்பான எம்.எம். 9 ரக கைத்துப்பாக்கி மற்றும் ஆறு ரவைகளை, 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்வதற்கு முயன்றபோதே, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  

பேலியகொடை பிரிவு, குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகள் குழுவால், ராகம மத்துமகல பிரதேசத்தில் வைத்தே, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  

வன்னி மனிதாபிமான நடவடிக்கையின் இறுதிப் போர் இடம்பெற்ற, முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில், இராணுவத்தின் தாக்குதலில் மரணமடைந்த, புலி உறுப்பினரின் சடலத்துக்கு அண்மையில் விழுந்து கிடந்த நிலையிலேயே இந்த கைத்துப்பாக்கியையும் ரவைகளையும் தான் மீட்டதாகவும், அதனை, ஒப்படைக்காமல் வீட்டில் மறைத்துவைத்திருந்தேன் என்றும் பொலிஸாரிடம் அவர் தெரிவித்துள்ளார்.  

ஞாயிற்றுக்கிழமை (13) மாலை கைதுசெய்யப்பட்ட சார்ஜன்ட், சூதாட்டம் மற்றும் பணம் பந்தயத்தில் அடிமையாகியிருந்ததாக அறியமுடிகிறது. ஆகையால், பல இலட்சம் ரூபாய், கடன்பட்டிருந்தார் என்றும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.  

அந்த ஆயுதத்தை விற்பனை செய்வதற்கு, தன்னுடைய நண்பர்கள் ஊடாக, விலைபேசி கொண்டிருந்த வேளையிலேயே, இந்த விவகாரம் தொடர்பில், பொலிஸ் விசேட பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது.  

அதனையடுத்து, ஒரு குற்றவியல் கும்பலின் உறுப்பினராக, வேடமிட்டுக்கொண்டு அவருடைய வீட்டுக்கு சென்ற பொலிஸ் விசேட பிரிவின் அதிகாரி, அவரைக் கைதுசெய்துள்ளார்.  

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இராணுவ விசேட படையணியின் (எஸ்.எப்) சாஜன்ட், வவுனியாவில் உள்ள இராணு முகாமில் கடமையாற்றுபவர் என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X