2024 மார்ச் 28, வியாழக்கிழமை

பூஜித்துக்கு இங்கிலாந்தில் பயிற்சி

Editorial   / 2018 செப்டெம்பர் 24 , பி.ப. 08:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

தன் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் காரணமாக, விசாரணைகளை எதிர்கொண்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, ஸ்கொட்லான்ட் யார்ட் பொலிஸாரின் பயிற்சி நிகழ்ச்சித் திட்டத்தில் கலந்துகொள்வதற்காக, இங்கிலாந்துக்குச் செல்லவுள்ளார். 

இது தொடர்பான தகவலை வெளியிட்ட, சட்டமும் ஒழுங்கும் பிரதியமைச்சர் நளின் பண்டார, எதிர்வரும் 30ஆம் திகதி, பொலிஸ்மா அதிபர், இங்கிலாந்துக்குப் பயணமாகவுள்ளார் என உறுதிப்படுத்தினார். 

பொலிஸ்மா அதிபரோடு, தானும், சட்டமும் ஒழுங்கும் அமைச்சின் செயலாளர் பத்மசிறி ஜயமான்ன, சிரேஷ்ட உதவிச் செயலாளர் எம். சூரியப்பெரும, பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகேஷ் சேனாரத்ன ஆகியோரும் செல்லவுள்ளதாகவும், பிரதியமைச்சர் மேலும் குறிப்பிட்டார். 

ஐக்கிய இராச்சிய அரசாங்கத்தால், பயிற்சிகளுக்கு விடுக்கப்பட்ட அழைப்பைத் தொடர்ந்தே, இவர்கள் பயணமாகவுள்ளனர். 

பயிற்சிகள் காரணமாக, ஒக்டோபர் 6ஆம் திகதிவரை, அங்கு இவர்கள் தங்கியிருப்பர். சமுதாய பொலிஸ் சேவை, பொலிஸ் மறுசீரமைப்பு ஆகியன தொடர்பாகவே, இந்தப் பயிற்சி அமையவள்ளது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X