2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பெலியத்த பிரதேச சபை தலைவர் பிணையில் விடுதலை

Editorial   / 2019 ஜூலை 22 , பி.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

கைதுசெய்யப்பட்ட பெலியத்த பிரதேச சபையின் தலைவர் சிறில் முனசிங்க, இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரை தாக்கினார் என்ற குற்றச்சாட்டின்பேரில், இன்று காலை (22) கைதுசெய்யப்பட்ட பெலியத்த பிரதேச சபையின் தலைவர் சிறில் முனசிங்க, தாங்காலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து,  நீதவான் எல்.டீ. வருஸவிதான பிணையில் செல்ல உத்தரவிட்டார்.

பெலியத்த பிரதேச சபையில் கடந்த 18 ஆம் திகதி இடம்பெற்ற கூட்டத்தின்போது, சபைத் தலைவர் தன்னைத் தாக்கியதாக, முன்னாள்  உறுப்பினர் அன்றைய தினம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து, தாக்குதலுக்கு இலக்கான அவர், தங்காலை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், 20 ஆம் திகதி வீடு திரும்பியுள்ளார்.

இந்நிலையில், தாக்குதல் மேற்கொண்ட பெலியத்த பிரதேச சபைத் தலைவர் சிறில் முனசிங்க இன்று காலை (22) ​பெலியத்த பொலிஸ் நிலையத்தில் ஆஜரானதையடுத்து, பொலிஸார் அவரை கைதுசெய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .