2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘ பேச்சுவார்த்தையூடாகவே தீர்மானிக்க வேண்டும்‘

Editorial   / 2019 ஜனவரி 14 , மு.ப. 08:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசமைப்புப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட புதிய அரசமைப்புக்கான இடைக்கால வரைவில் உள்ளடக்கப்பட்டுள்ள “ஒருமித்த நாடு” என்ற சொற்களில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டுமாயின், அது தொடர்பில் கலந்துரையாடித் தீர்மானமொன்றை எடுக்க வேண்டுமென, அரசமைப்புச் சீர்திருத்தம் தொடர்பாக பொதுமக்களின் கருத்துகளைக் கேட்டறியும் நிபுணர்குழு அறிவித்துள்ளது.  

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள மேற்படி நிபுணர் குழுவின் தலைவர் லால் விஜேநாயக்க, நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் சமர்ப்பிக்கப்பட்ட புதிய அரசமைப்பு தொடர்பான வரைவு, இறுதி வரைவு அல்லவெனக் கூறினார்.   எவ்வாறாயினும், யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் (12) இடம்பெற்ற அரசியல் கருத்தாடல் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியிருந்த புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான வழிநடத்தல் குழுவின் உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன், இந்த “ஏக்கிய இராஜ்ஜிய” என்ற பதம், “ஒருமித்த நாடு” என்றுதான் பொருள்படும் என்றும் இதனைத் தான், கூறிக் கூறிச் சலித்துவிட்டதாகவும் ஆனால் அந்தப் பதம், ஒற்றை ஆட்சியைக் குறிக்கின்றதென்ற ஒரு பரவலான கருத்து உள்ளதெனவும் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .