2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பேராயர் ரஞ்சித் ஆண்டகை உயர்நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல்

Editorial   / 2019 ஓகஸ்ட் 01 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனிநபர் பிரேரணையாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாஸராஜபக்‌ஷவால், நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள, ஞாயிறு, போயா தினங்களில் பிர​த்தியேக வகுப்புகளை நடத்துவதை தடுக்கும் வகையிலான, விடுமுறை திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக, பேராயர் ரஞ்சித் மெல்கம் ஆண்டகை, இன்று உயர்நீதிமன்றத்தில் இடையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

அறநெறி வகுப்புகளுக்கு தடையேற்படும் வகையில், தனியார் வகுப்புகளை நடத்துவது சகல கல்வி துறைக்குமான அகௌரவம் என்றும் பேராயர் தெரிவித்துள்ளதுடன் தனியார் கல்வி நிறுவனங்கள் பணம் சம்பாதிக்கும் நிலையங்களாக மாறியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை இந்த திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி, பிரத்தியேக வகுப்புகளை நடத்தும் ஆசிரியரான சுதத் டியகுஆராச்சி உள்ளிட்ட பலர் உயர்நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .