2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘பொ.பெரமுனவுக்கு த.தே.கூட்டமைப்பு எச்சரிக்கை’

Editorial   / 2018 டிசெம்பர் 13 , பி.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரகசிய உடன்படிக்கை செய்துக்கொண்டுள்ளதாக தொட​ர்ந்தும் குற்றச்சாட்டப்பட்டால்,  பொதுஜன பெரமுன தம்முடன் உடன்பட்ட விடயங்கள் குறித்து பகிரங்கமாக அறிவிக்கப்படுமென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

ரணில் விக்கிரமசிங்க பிரதமராகுவதற்கு த.தே.கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்தது எவ்வித உடன்படிக்கைக்கு அமைய இல்லையென்றும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்,  தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக த.தே.கூட்டமைப்பு எடுத்த முடிவை நகைச்சுவையாக்கி, ஐக்கிய தேசிய கட்சியுடன் இரகசிய ஒப்பந்தம் செய்துக்கொள்ளப்பட்டுள்ளதாக தொடர்ந்தும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலை நீடிக்கப்பட்டால் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட பொதுஜன பெரமுன கட்சியின் அரசியல்வாதிகள் த.தே.கூட்டமைப்புடன் கலந்துரையாட முன்வந்த விடயங்கள் குறித்து அம்பல்படுத்த நேரிடும் என்றும் சுமந்திரன் எச்சரித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .