2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘பொய்களைப் பரப்ப வேண்டாம்’

Editorial   / 2018 ஜூலை 16 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

காணாமற்போனோர் அலுவலகத்தின் அமர்வைப் புறக்கணித்து, காணாமற்போனவர்களின் உறவினர்கள் யாழ்ப்பாணத்தில் எதிர்ப்பு ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டதாக, ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்த தகவல்கள், உண்மைக்குப் புறம்பானவையென, அந்த அலுவலகம் தெரிவித்துள்ளது.

காணாமற்போனோர் தொடர்பில் ஆராயும் நிரந்தர அலுவலகத்தின் மாவட்ட மட்ட அமர்வின் அடுத்தகட்டம், நேற்று முன்தினம் (14), யாழ்ப்பாணத்தின் பல்வேறு பிரதேசங்களில் இடம்பெற்றன.

இந்நிலையில், இந்த அமர்வுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இந்த அலுவலகத்தின் மீதான நம்பிக்கையீனத்தை வெளிப்படுத்தியும், காணாமல் போனவர்களின் உறவினர்கள், எதிர்ப்பு ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டதாகச் செய்திகள் வெளியாகியிருந்தன.

எனினும், இதற்கு ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் பதிலளித்துள்ள காணாமற்போனோர் தொடர்பில் ஆராயும் அலவலகத்தின் தவிசாளர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், பொய்யான தகவல்களை பரப்ப வேண்டாமெனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், காணாமற்போனோர் தொடர்பில் ஆராயும் அலவலகத்தின் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலேயே ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதாகவும் எனினும், ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற அதே சமயத்தில், நூற்றுக்கணக்கான காணாமற்போனவர்களின் உறவினர்கள் இந்த அமர்வில் பங்கேற்றதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .