2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

’பொலிஸாருக்கு காத்திருக்கும் மற்றுமொரு கடமை’

Editorial   / 2018 ஓகஸ்ட் 19 , பி.ப. 02:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

தடைசெய்யப்பட்ட பொலித்தீன்களை உற்பத்தி செய்யும், விற்பனை செய்யும் நபர்களை சட்டத்தின் பிடியில் சிக்க வைப்பதற்கு, பொலிஸாரின் உதவியைப் பெற்றுக்கொள்ள, மத்திய சுற்றாடல் அதிகாரசபையினர் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்குத் தேவையான சட்டத்தை உருவாக்கும் வேலைத்திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் கழிவுகளுக்கான முகாமைத்துவப் பிரிவின் பிரதி பணிப்பாளரும், பொறியியலாளருமான உபாலி இந்திரரத்ன தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, பொலிஸார் போக்குவரத்து சட்டங்களை நடைமுறைப்படுத்துவதைப் போன்றே, சுற்றாடல் தொடர்பான சட்டத்தையும் நடைமுறைப்படுத்துவரென எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்ட பொலித்தீனை உற்பத்தி செய்த 300 உற்பத்தியாளர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும், உபாலி இந்திரரத்ன தெரிவித்துள்ளார்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .