2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பொலிஸ்மா அதிபர் பதவி விலகுவாரா?

Editorial   / 2018 செப்டெம்பர் 24 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசிய கட்சியின் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரை பதவியிலிருந்து விலக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இருப்பதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில், பொலிஸ்மா அதிபரின் விவகாரத்தால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இடையிலான முரண்பாடுகள் மேலும் அதிகரிக்கும் எனவும் சிங்கள பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும், ஐக்கிய நாடுகளின் 73ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்துகொள்வதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியூயோர்க்  சென்றுள்ள ​நிலையில், அவர் நாடு திரும்பியதும் பொலிஸ்மா அதிபரை பதவியிலிருந்து விலக்குவார் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .