2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

போதை வர்த்தக கைதிகளின் அலைபேசி அழைப்புகள் தொடர்பில் விசாரணை

Editorial   / 2018 ஜூலை 22 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 போதை வர்த்தகத்தில் ஈடுபட்டார்களென குற்றச்சாட்டில் சிறை வைக்கப்பட்டுள்ள கைதிகள் சிறையில் இருந்தவாறு மேற்கொண்ட அலைபேசி அழைப்புகள் தொடர்பாக விசேட விசாரணைகள் ஆரம்பித்துள்ளதாக, பொலிஸ் விசேட படையணியின் கட்டளையதிகாரி சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எம்.ஆர்.லதீப் தெரிவித்துள்ளார்.

சிறை வைக்கப்பட்டுள்ள 6 போதை வர்த்தக கைதிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ள அலைபேசி அழைப்புகள் தொடர்பில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு இதுவரை பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய, குறித்த கைதிகள் அதிகளவில் ​அலைபேசி அழைப்புகளை மேற்கொண்டுள்ளதாகவும், குறித்த கைதிகளுள் பலர் 3000 இற்கும் மேற்பட்ட அழைப்புகளை மேற்கொண்டிருப்பது தெரியவந்துள்ளதெனவும் இவைத் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளதுடன், இந்த அழைப்புகளுள் அதிகமானவை வெ ளிநாடுகளுக்கு மேற்கொள்ளப்பட்டிருப்பது தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதென பொலிஸ் விசேட படையணியின் கட்டளையதிகாரி சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எம்.ஆர்.லதீப் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .