2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

’போதைப்பொரு​ள் கடத்தலைக் கட்டுப்படுத்த இந்திய உதவி தேவை’

Editorial   / 2018 மே 18 , பி.ப. 12:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீவு நாடு என்ற வகையில், சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் காரணமாக, இலங்கைக்கு பெரும் பாதிப்புகள் ஏற்படுவதாகக் குறிப்பிட்ட  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இதனைத் தடை செய்வதற்கு, இந்திய இராணுவத்தின் உதவியை எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் இந்திய இராணுவ பணிக்குழாம் பிரதானி ஜெனரல் பீபின் ராவட், இன்று (18) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்தார்.

இதன்போது, சகோதர அயல்நாடுகள் என்றவகையில், இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் நீண்டகாலமாக நிலவிவரும் நற்புறவுகளை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, இந்த உறவை மேலும் பலப்படுத்துவது, தனது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகுமெனக் குறிப்பிட்டார்.

இருநாடுகளுக்குமிடையிலான புலனாய்வுத் தகவல் பிரிவுகளைப் பலப்படுத்துதல், தேசிய மற்றும் பிராந்திய பாதுகாப்புக்கு மிகவும் முக்கியமானதாகுமெனக் குறிப்பிட்ட இந்திய இராணுவத்தின் பணிக்குழாம் பிரதானி, இதற்கு இலங்கை அரசாங்கத்தின் உதவியை எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

புலனாய்வுப் பிரிவைப் பயிற்றுவித்தல் மற்றும் இரு நாடுகளுக்கிடையில் நவீன தொழில்நுட்பப் பரிமாற்ற நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .