2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

போலி வைத்தியருக்கு விளக்கமறியல்

Editorial   / 2019 ஜூன் 15 , பி.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

போலி வைத்திய சான்றிதழ்களுடன் தனியார் மருத்துவமனை ஒன்றை, தலவாக்கலை நகரில் நடத்திவந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சம்மாந்துறையைச் சேர்ந்த போலி வைத்தியரை, இம்மாதம் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, நுவரெலியா மாவட்ட நீதவான்,  நேற்று (14) மாலை உத்தரவிட்டார்.

அவர், கடந்த பல மாதங்களாக, தனியார் மருத்துவமனையை நடத்திவந்துள்ளார் என விசாரணைகளிலிருந்து கண்டறியப்பட்டுள்ளதென, பொலிஸார் தெரிவித்தனர்.

அந்த வைத்தியர் தொடர்பில் தகவல்கள் கிடைத்ததன் பின்னர், அந்த மருத்துவமனைக்குச் சென்ற, பொதுச் சுகாதார பரிசோதகர் மற்றும் தலவாக்கலை - லிந்துலை நகர சபைத் தவிசாளர் அசோக சேபால உள்ளிட்டோர் வைத்திய சான்றிதழைக் காட்சிப்படுத்துமாறு கோரியுள்ளனர். அத்துடன், காண்பிக்குமாறும் கேட்டுள்ளனர்.

சான்றிதழ்களைக் காண்பிப்பதற்குத் தொடர்ச்சியாக மறுப்புத் தெரிவித்து வந்துள்ள அவர், காட்சிப்படுத்தவும் இல்லை. இந்நிலையில், தனியார் மருத்துவமனைக்கு, சென்ற நகர சபைத் தவிசாளர் உட்பட உறுப்பினர்கள் சிலர், வைத்திய சான்றிதழ்களைக் காண்பிக்குமாறு மீண்டும் கேட்டுள்ளனர். அதற்கு, அவர் மறுப்புத் தெரிவித்துள்ளார். அதனையடுத்தே, அதுதொடர்பில்  தலவாக்கலை பொலிஸாரின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.  

தலவாக்கலை பிரதேசத்துக்குப் பொறுப்பான பொதுச் சுகாதார வைத்திய அதிகாரியுடன் ஸ்தலத்துக்கு விரைந்த தலவாக்கலை பொலிஸார், குறித்த வைத்தியருடைய வைத்திய சான்றிதழ்களைச் சோதித்தனர்.

அதன்பின்னரே, அந்தச் சான்றிதழ்கள் யாவும் போலியானவை எனக் கண்டறிக்கப்பட்டது. அதனையடுத்து, அந்த நபர் கைது செய்யப்பட்டார்.

கைதுசெய்யப்பட்டவர்,  சம்மாந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த முகமது இஸ்மாயில் என்பவர் என்பவராவார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .