2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

’முகக்கவசத்தை தொட்டால் ஆபத்து’

Niroshini   / 2021 மே 17 , மு.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

முகக்கவசத்தின் மேற்பரப்பை அடிக்கடி தொடுவது, பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்துமென்று, சுவாச நோய்கள் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் சன்ன டீ சில்வா தெரிவித்துள்ளார்.

சுற்றுச்சூழலில் காணப்படும் வைரஸ்கள், மூக்கு மற்றும் வாய் வழியாக உடலுக்குள் செல்வதைத் தடுப்பதற்காகவே முகக்கவசம் அணியப்படுகிறது என்று தெரிவித்த அவர், சில வேளைகளில், நாம் அணிந்திருக்கும் முகக்கவசத்தின் மேற்புறத்தில் வைரஸ்கள் படிந்திருந்தால், அந்த மேற்புறத்தைத் தொடுவதன் மூலம், எமது உடலுக்குள் அவை செல்ல அதிக வாய்ப்புள்ளது என்றும் கூறினார்.

கொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்குக் கையாளும் வழிமுறைகளில், முகக்கவசம் அணிவது கட்டாயமாகின்ற போதிலும் அந்த முகக்கவசத்தை முறையாக அணிய வேண்டுமென்றும் அவ்வாறு அணியப்படுவதால், உலக நாடுகளிலுள்ள சுவாச நோய்கள் பலவற்றை இல்லாதொழிக்க முடியுமென்றும் அவர் எடுத்துரைத்துள்ளார்.

இதேவேளை, ஒரு முகக்கவசத்தை பல நாட்கள் அணியக் கூடாதென்றும் கழுவி அணிவதால்கூட, எதிர்பார்த்த பிரதிபலனைப் பெற முடியாதென்றும் குறிப்பிட்டுள்ள விசேட வைத்திய நிபுணர், துணியிலான முகக்கவசங்களைக் கழுவி அணிய முடியுமென்றும் அவ்வாறாயின் இரண்டு முகக்கவசங்களை அணிவதே பாதுகாப்பைத் தருமென்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அணிந்திருந்த முகக்கவசத்தின் மேற்புறத்தில் வைரஸ்கள் படிந்திருக்க வாய்ப்புள்ளதால், அவற்றை முகத்திலிருந்து நீக்கி, ஆங்காங்கே மேசைகள் மீது வைப்பதைத் தவிர்த்துக்கொள்ளுமாறும் அவற்றை முறையாக அகற்ற நடவடிக்கை எடுப்பதே பாதுகாப்பானது என்றும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .