2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மகிந்தவுக்கு எதிரான வழக்கு

Editorial   / 2017 டிசெம்பர் 13 , பி.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அழுத்கமகேவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணை, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று (13) எடுத்துகொள்ளப்பட்டது. 

மகிந்தானந்த அழுத்கமகே அமைச்சராக செயற்பட்ட காலத்தில் 20 மில்லியன் ரூபாய் செலவில் பொரளையில் வீடு ஒன்றினை கொள்வனவு செய்துள்ளார். 

குறித்த வீட்டை வாங்குதற்கான நிதி, சட்டவிரோதமான முறையில் பெற்றுக்கொள்ளப்பட்டது எனவும், அந்த நிதியிலேயே வீடு கொள்வனவு செய்யப்பட்டுள்ளது எனவும் குற்றம் சுமத்தப்பட்டே வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவருக்கு எதிராக பணச் சலவை தடுப்புச் சட்டம் மற்றும் குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் கீழ், சட்டமா அதிபரால் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  

இவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நீதிமன்றில் விசாரணைக்கு, நேற்று (13) எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, மோசடியான முறையில் சம்பாதித்த பணத்தில் ஆடம்பர வீடு ஒன்றை கொள்வனவு செய்தார் என்ற குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே, தான் குற்றவாளி அல்ல என நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். அளுத்கமகேவுக்கு எதிரான குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட்டபோதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .