2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

’மகேந்திரன் சாட்சியமளிக்க வேண்டும்’

Editorial   / 2017 செப்டெம்பர் 21 , மு.ப. 04:00 - 1     - {{hitsCtrl.values.hits}}

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், வெளிநாட்டு பிரஜையாக இருந்தாலும், இலங்கை சட்டத்தின் கீழ் உட்பட்டவர். ஆகையால், அவர் ஆணைக்குழுவில் சாட்சியமளிக்கவேண்டும் என்று பிணைமுறி தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில், அந்த ஆணைக்குழு, நேற்று (20) விடுத்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், இலங்கைப் பிரஜை இல்லை என்பதால், பிணைமுறி தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில், சாட்சியமளிக்க வேண்டிய அவசியமில்லை என, அவர் சார்பாக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி றொமேஷ் டி சில்வா செவ்வாய்க்கிழமை (19) தெரிவித்திருந்தார்.

இந்நிலையிலேயே, ஆணைக்குழு மேற்கண்டவாறு அறிக்கையை விடுத்துள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“அர்ஜுன மகேந்திரன் வெளிநாட்டவராக இருந்தாலும் எங்களுடைய அதிகாரத்துக்கு அப்பாற்பட்ட நபரென எம்மால் கவனத்திற்கொள்ள முடியாது. அவர், ஆணைக்குழுவில் ஆஜராகி சாட்சியமளிக்க வேண்டும் என்பதற்காகவே நோட்டிஸ் அனுப்பப்பட்டது.

“அர்ஜுன மகேந்திரன், இலங்கையின் மத்திய வங்கியின் ஆளுநராகப் பதவியேற்றதன் பின்னர் அவரை வெளிநபராகக் கவனத்தில் கொள்ள முடியாது. அர்ஜுன மகேந்திரனின் நிலைப்பாடும், அர்ஜுன அலோசியஸின் நிலைப்பாடும் ஒன்றுக்கொன்று வேறுபட்டுள்ளது.

“அர்ஜுன மகேந்திரனுக்கு நோட்டிஸ் அனுப்பி வைக்கப்பட்ட போது, தனக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்குத் தாக்கல் செய்ய முடியும் என்றும் அதில் தன்னைப் பிரதிவாதியாக குறிப்பிட முடியும். அதனடிப்படையில்தான் ஆணைக்குழுவில் சாட்சியமளித்தால் அது தனக்குப் பாரபட்சமாக அமையும் என்றும் தெரிவித்திருந்தார்.

“இந்நிலையில், ஆணைக்குழுவில், தான் சாட்சியமளிப்பேன் எனத் தெரிவித்திருந்த நிலையில், அவர் சாட்சியமளிக்க வேண்டும். அது தொடர்பில் அவரது சட்ட ஆலோசகர் ஆலோசனை வழங்குவார் என ஆணைக்குழு நம்புகின்றது” என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 1

  • RMS ARIYARATHNA Thursday, 21 September 2017 01:58 AM

    அர்ஜுன் மஹேந்திரன் மட்டும்மல்ல அர்ஜுன் அலோசியஸ் கூட பிணைமுறி விசாரணைக்குழு முன் சாட்சியமளிக்க வேண்டும். இது எமது நேசத்திற்கு நடந்த பெரிய நஷ்டம். இது ஈடுபடுவதற்கு செயற்படுவதை எல்லோருடைய கடமையென்று மறக்கக் கூடாது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .