2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மக்கொலியின் மறைவுக்கு ஜனாதிபதி அனுதாபம்

Editorial   / 2018 பெப்ரவரி 26 , மு.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளரும் ஐ.நாவின் அபிவிருத்தி வேலைத்திட்ட வதிவிடப் பிரதிநிதியுமான ஊனா மக்கொலியின் மறைவு தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தன்னுடைய அனுதாபத்தை நேற்று (25) பதிவு செய்தார்.  

கொழும்பில் உள்ள ஐ.நா அமைப்பின் இலங்கை காரியாலயத்துக்குச் சென்ற ஜனாதிபதி, அங்கு வைக்கப்பட்டிருந்த விசேட நினைவுப் புத்தகத்தில் தன்னுடை அனுதாபத்தைப் பதிவிட்டார்.  

ஊனா மக்கொலி, மாரடைப்பு காரணமாக, கடந்த 23 ஆம் திகதி காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 54 ​ஆகும். 

இலங்கையின் முதலாவது பெண் ஐ.நா வதிவிட ஒருங்கமைப்பாளரான திருமதி மக்கொலி, தைரியமும் உறுதியும் கொண்ட ஒரு தலைவராவார். அதி சிரேஷ்ட ஐ.நா உத்தியோகத்தரான மக்கொலி, 21 வதிவிட, வதிவிடமல்லா ஐ.நா முகவரகங்களை கொண்ட குழுவுக்கு தலைமை தாங்கியதுடன் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் இலங்கைப் பிரதிநிதியாகவும் கடமையாற்றினார். 

திருமதி மக்கொலி, இலங்கையில் ஆறு வருடங்கள் கடமையாற்றியிருந்தார். இரண்டு வருடங்கள் ஐ.நா வதிவிட ஒருங்கமைப்பாளரகவும் ஐ.நா அபிவிருத்தி வேலைத்திட்ட இலங்கைப் பிரதிநிதியாகவும் அவர் கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .