2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

மணிவண்ணனுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Editorial   / 2021 ஏப்ரல் 10 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் 

கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுது்தப்பட்டிருந்த  யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன், கடந்த 9ஆம் திகதியன்று பிணையில் விடுவிக்கப்பட்டார்.

யாழ். நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.பீற்றர் போல் முன்னிலையில் அன்றையதினம் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அவரை 2 இலட்ச ரூபாய் சரீரப்பிணையில் நீதவான் விடுதலை செய்தார்.

அத்துடன் குறித்த வழக்கை ஜூன் மாதம் 26 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

யாழ்.மாநகர சபையினால் மாநகரத்தின் தூய்மையை பேண உருவாக்கப்பட்ட குழுவின் சீருடை தமிழீழ விடுதலைப் புலிகளின் காவல்துறையின் சீருடையை ஒத்த சீருடை என பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் நேற்றைய தினம் இரவு வாக்கு மூலம் வழங்க வருமாறு முதல்வர் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டார். 

பொலிஸ் நிலையத்தில் சுமார் 06 மணி நேரம் விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் தமிழீழ விடுதலைப்புலிகளை மீள உருவாக்க முயற்சித்த குற்ற சாட்டில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வவுனியாவில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவின் அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். 

இந்நிலையில் விசாரணைகளின் பின்னர் நேற்று (09) வெள்ளிக்கிழமை இரவு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.பீற்றர் போல் முன்னிலையில் தண்டனை சட்டக்கோவை பிரிவின் கீழ் முற்படுத்தப்பட்டார். 

மணிவண்ணன் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தலைமையில் 25 சட்டத்தரணிகளுக்கு மேல் முன்னிலையானார்கள்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .