2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

மண்ணெண்ணை உற்பத்தியால் ஒரு லீற்றருக்கு ரூபாய் 23 நட்டம்

Editorial   / 2018 ஜூலை 19 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒரு லீற்றர் மண்ணெண்ணைக்கான உற்பத்தி செலவில், பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு, 23 ரூபாய் 89 சதம் நட்டம் ஏற்படுவதாக, பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது, ஜயந்த சமரவீர எம்.பி, கேட்டிருந்த கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே, அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து பதிலளிக்கையில்,

“விலை அதிகரிக்கப்பட்ட மண்ணெண்ணெய் ஒரு லீற்றரின் விலையை மீனவர்களின் கேரிக்கையால் 70 ரூபாயாகக் குறைத்தோம். ஆனால், எமக்குத் தற்போதும் மண்ணெண்ணெய் லீற்றருக்கு 93 ரூபாய் 89 சதத்தை ஒதுக்கவேண்டியுள்ளது. எவ்வாறாயினும், ஒரு லீற்றர் மண்ணெண்ணையை 23 ரூபாய் 89 சதம் நட்டத்திலேயே விநியோகிக்கின்றோம்” என்றார்.

“எரிபொருளுக்கான விலை சூத்திரம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் உங்களுக்கும் அது பற்றி அறிவிக்கப்படும். பெரும்பாலும் எரிபொருள் சூத்திரம் திறைசேரியினால் தீர்மானிக்கப்படும். எரிபொருட்களின் விலைகள், உலக சந்தையில் உயரும் போது உள்நாட்டில் எரிபொருள் விலை அதிகரிக்கவும், விலை குறையும் போது விலையை குறைக்கும் வகையில் எரிபொருள் சூத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளதெனப் பதிலளித்த அவர், அமைச்சரவையின் அங்கிகாரத்துடன் அதற்கான குழுவை அமைத்துள்ளோம். அந்தக் குழுவால் வழங்கப்படும் ஆலோசனைக்கமைவாகவே விலையின் ஏற்ற இறக்கம் தொடர்பாகத் தீர்மானிக்கப்படும்” என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X